மரியாதைக்குரியவரு(ளு)க்கு...
மனித வாழ்க்கையின் அடிப்படையாக திகழும் முக்கியமானவற்றில் ஒன்று - உறவுகள். அணு அளவே ஆனாலும் ஆதியில் உயிர் கொடுத்தவன், தொப்புள் கொடி வழியே ஊண் கொடுத்தவள் முதல் அந்தத்தில் கொள்ளி போடும் கைகள் வரை எத்தனை உறவுகள். உறவுகள் என்று பன்மையில் கூறினாலும் உறவு என்பது இருவரை மட்டும் தான் குறிக்கும் என்பது என் கருத்து. மூன்று மகள்கள் இரண்டு மகன்களை பெற்றெடுத்த தாயாக இருந்தாலும், ஒவ்வொரு பிள்ளையுடனும் இருப்பது ஒரு தனி உறவு தான். அதே போல் பள்ளி கல்லூரி பருவத்தில் ஐந்து பேர் கொண்ட குழுவாக சுற்றி திரிந்தாலும், அந்த ஐவரில் ஒருவருக்கு ஒருவர் ஒரு தனி புரிதல் இருக்க தான் செய்யும். எனக்கே எனக்கு என்று உயிரில் கலந்து வாழும் உறவாகினும், ஐந்து தங்கைகளில் மூன்றாமவளுடன் கொண்ட உறவாகினும், துணைவனின் சிற்றன்னை என்ற உறவாகினும், பத்து ஆண்டுகளாய் ஒரே வகுப்பறையில் காலம் தள்ளிய உறவாகினும், ஞாயிறு அன்று மட்டும் தெரு முனையில் சந்தித்து பேசும் உறவாயினும், அதற்கு கருவாக இருப்பது இரண்டு மனித உயிர்கள் தான். அந்த உறவுக்கு காரணமாகவும் கருத்தாகவும் இருக்க கூடிய பொருட்களில் முக்கியமானது பரஸ்பர மரியாதை. மரியாதை என்று கூறி...