தி கருவேப்பிலை தியரி ஆப் நேஷனல் எகானமி!
நேற்று மாலை சுமார் ஆறு மணியளவில் நான் என்னுடைய மிதிவண்டியில் ஏறி, சன்பிளவர் ஆயிலை (சூரியகாந்தி பூ எண்ணெய் ) தேடி புனித பயணம் ஒன்றை மேற்கொண்டேன். அதனால் எனக்குள் ஏற்பட்ட தெளிவுரைகள் வாசகர்களின் கனிவான கவனத்திற்கு… ஜெர்மனி நாட்டில் சூரியகாந்தி பூ எண்ணெய் பெரும்பாலும் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து தான் இறக்குமதி செய்ய படுகின்றனவாம். அந்நாடுகளின் தற்போதைய நிலையினால் ஐரோப்பாவின் பல நாடுகளில் பல பொருட்கள் விலைவாசி உயர்வை கண்டுள்ளது. அதில் குறிப்பாக சூரியகாந்தி பூ எண்ணெய்க்கு ஏற்பட்டிருக்கும் மவுசு, சில மாதங்கள் முன்பு இந்தியாவில் வெங்காயம் என்று காகிதத்தில் எழுதி பிரியாணியில் போட்டு சமைத்த மவுசை போன்றதாகும். 2016 ஆம் ஆண்டு நான் முதன்முதலில் ஜெர்மனி வந்தபோது பல சரக்கு அங்காடிகளில் சூரியகாந்தி பூ எண்ணெய் மற்றும் ரேப்சீடு எண்ணெயின் விலைகளை பார்த்து ஆச்சரிய பட்டேன். ஒரு லிட்டர் 0.75 சென்ட்ஸ். இந்த ஐந்து ஆண்டுகளில் விலைவாசி உயர்வின் காரணமாக அவை 1 யூரோ வை தாண்டி விட்டன. ஆனால், கடந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னுடைய அகக்கண்களை பல்வேறு விதமாக திறந்துவிட்டது. “20...