Posts

நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க!

"நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க" இந்த வாக்கியத்தை எத்தனை முறை கேட்டிருப்பீர்கள்? இதை ஒரு காரணமாக எத்தனை முறை கேட்டிருப்பீர்கள்? கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும், இந்த வாக்கியம் இரண்டு தலைமுறைகளைத் தடம் புரளச் செய்திருக்கிறது. விருப்பப்பட்ட எதையும் செய்யவிடாமல் தடுக்க, கஷ்டமாக இருந்தாலும் அதையே தொடர்ந்து செய்ய, உரிமைகள் பறிக்கப்பட்டு அடிமைத்தனம் போன்ற நிலையில் இருந்தாலும், மற்றவர்கள் தவறாக எதுவும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காகக் கொடுக்கப்படும் முட்டுக்கட்டை. இந்த நிலையை எதிர்த்து போராடி, யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, நான் இதைச் செய்வேன் என்ற தைரியம் கொண்ட சிலர் வந்த முதல் தலைமுறையில் நானும் இருக்கிறேன். ஆனால் நான் எத்தனை முறை இந்தக் குட்டிச்சுவரைத் தாண்டி வந்தேன் என்று கேட்டால், விரல் விட்டு எண்ணி விடலாம். அதுவும் ஒரு கை விரல்கள் போதும். என் தாயிடம் கேட்டால், நான் தினமும் நான்கு முறை இப்படி ஏதாவது செய்கிறேன் என்று சொல்வார். இதில் மட்டும் அவரை நம்புவது தவறு. நான் பாவம், அப்பாவி. நாலு பேர் அல்ல, ஒருவரும் என்னைப் பற்றி எதுவும் தவறாகப் பேசிவிடக் கூடாது என்று சொல்லிச் சொல்லி வளர்க...

செயற்கை நுண்ணறிவின் கடவுள்

Image
  முன்குறிப்பு : செயற்கை நுண்ணறிவு என்ற பெயரை பார்த்தவுடன் ஏதோ பெரிய சமாச்சாரம் என்று எண்ணி இந்த பக்கத்தை மூடி விட வேண்டாம். பொது மக்களுக்கு புரியும் எளிய நடையில் AI அல்லது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்று சொல்லலாம். (செம்மொழியான எம் தாய் மொழியை விட ஆங்கிலம் எளிய மொழி ஆன கோர சம்பவத்தில் பங்கு கொண்ட முதல் தலைமுறை என்பதில் வெட்கம் கொள்கிறேன்!) chatgpt, gemini, canva போன்ற பெயர்களை உங்கள் கைப்பேசிகளில் பார்க்காமல் இருந்திருக்க மாட்டீர்கள். ஐம்பது வயதிற்கு குறைந்தவராக இருந்து, தற்போது பணியில் இருப்பவராக இருந்தால் இவற்றை பயன்படுத்தாமல் இருந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். அதுவும் chatgpt என்னும் இந்த நவயுக ஆபத்பாந்தவன் கை கொடுக்காத இடங்களே இல்லை இன்று. கல்யாண வீடுகளில் இரண்டாம் வரிசையில் முதல் ஆளாக அமர்ந்து அனைவரிடமும் கலகலவென பேசும் தூரத்து சொந்தகார மாமா போன்றது இந்த chatgpt என்னும் செயற்கை நுண்ணறிவு தளம். எந்த தலைப்பு கொடுத்தாலும் பேசுவார். எத்தனை முறை வேண்டுமானாலும் கூறுவார். கூறியதையே மறுபடி மறுபடி வெவ்வேறு வார்த்தைகள் கோர்த்து கூறுவார். அவர் கூறுவது எல்லாமே உண்மை தானா என்று ...

தை பிறந்தால் வழி பிறக்கும்!

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மறுபடி இந்த பக்கம் காலடி வைக்கிறேன். வாழ்வின் மிக முக்கியமான அழகான மூன்று ஆண்டுகளை கடந்து கொண்டிருக்கையில் வெளி உலகத்துடன் பேச எனக்கு ஏதும் இருக்கவில்லை. நானே எனக்குள் பேசிக்கொண்ட வார்த்தைகள் கூட அத்தியாவசியமான அன்றாட வாழ்க்கைக்காக மட்டும் தான் இருந்தது. 'நலம். நலமறிய ஆவல்' போன்ற பொதுப்படை அக்கறை வாக்கியங்களை நெருங்கிய சொந்தங்களுக்கும் நட்புகளுக்கும் கொடுக்கவே வாய்ப்புகள் குறைவாக இருந்த காலம் அவை.  மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உண்மை தான். மாற்றங்கள் வேண்டும் என்று மனம் எப்படி தவிக்கிறதோ, மாற்றம் ஒன்று நடந்துவிட்டால், பழைய நிலையை எண்ணி ஏங்க தொடங்குகிறது. இக்கரைக்கு அக்கறை பச்சை என்ற வாக்கியத்தின் கால நிலை பற்றி பேசும் கோணம் இது. இது என்னுடைய இயல்பு தானா? இல்லை உங்கள் எல்லோருக்கும் இப்படி தானா? புதுமை வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டு, பழமையின் இனிமையை மெருகேற்றி பேசி புதுமையின் சுவையை உணராமலே போக வேண்டியதாகிறது சில சமயங்களில்.  எது எப்படியோ. புதுமையோ பழமையோ. மாற்றமோ ஒரே இடத்தில் தேக்கமோ. காலச்சக்கரம் ஓடுவதை நிறுத்துவது இல்லை. நாமும் ஓடியே ஆக வேண்டும...

மரியாதைக்குரியவரு(ளு)க்கு...

 மனித வாழ்க்கையின் அடிப்படையாக திகழும் முக்கியமானவற்றில் ஒன்று - உறவுகள். அணு அளவே ஆனாலும் ஆதியில் உயிர் கொடுத்தவன், தொப்புள் கொடி வழியே  ஊண் கொடுத்தவள் முதல் அந்தத்தில் கொள்ளி போடும் கைகள் வரை எத்தனை உறவுகள். உறவுகள் என்று பன்மையில் கூறினாலும் உறவு என்பது இருவரை மட்டும் தான் குறிக்கும் என்பது என் கருத்து. மூன்று மகள்கள் இரண்டு மகன்களை பெற்றெடுத்த தாயாக இருந்தாலும், ஒவ்வொரு பிள்ளையுடனும் இருப்பது ஒரு தனி உறவு தான். அதே போல் பள்ளி கல்லூரி பருவத்தில் ஐந்து பேர் கொண்ட குழுவாக சுற்றி திரிந்தாலும், அந்த ஐவரில் ஒருவருக்கு ஒருவர் ஒரு தனி புரிதல் இருக்க தான் செய்யும். எனக்கே எனக்கு என்று உயிரில் கலந்து வாழும் உறவாகினும், ஐந்து தங்கைகளில் மூன்றாமவளுடன் கொண்ட உறவாகினும், துணைவனின் சிற்றன்னை என்ற உறவாகினும், பத்து ஆண்டுகளாய் ஒரே வகுப்பறையில் காலம் தள்ளிய உறவாகினும், ஞாயிறு அன்று மட்டும் தெரு முனையில் சந்தித்து பேசும் உறவாயினும், அதற்கு கருவாக இருப்பது இரண்டு மனித உயிர்கள் தான். அந்த உறவுக்கு காரணமாகவும் கருத்தாகவும் இருக்க கூடிய பொருட்களில் முக்கியமானது பரஸ்பர மரியாதை. மரியாதை என்று கூறி...

தி கருவேப்பிலை தியரி ஆப் நேஷனல் எகானமி!

 நேற்று மாலை சுமார் ஆறு மணியளவில்  நான் என்னுடைய மிதிவண்டியில் ஏறி, சன்பிளவர் ஆயிலை (சூரியகாந்தி பூ எண்ணெய் ) தேடி புனித பயணம் ஒன்றை மேற்கொண்டேன். அதனால் எனக்குள் ஏற்பட்ட தெளிவுரைகள் வாசகர்களின் கனிவான கவனத்திற்கு… ஜெர்மனி நாட்டில் சூரியகாந்தி பூ எண்ணெய் பெரும்பாலும் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து தான் இறக்குமதி செய்ய படுகின்றனவாம். அந்நாடுகளின் தற்போதைய நிலையினால் ஐரோப்பாவின் பல நாடுகளில் பல பொருட்கள் விலைவாசி உயர்வை கண்டுள்ளது. அதில் குறிப்பாக சூரியகாந்தி பூ எண்ணெய்க்கு ஏற்பட்டிருக்கும் மவுசு, சில மாதங்கள் முன்பு இந்தியாவில் வெங்காயம் என்று காகிதத்தில் எழுதி பிரியாணியில் போட்டு சமைத்த மவுசை போன்றதாகும். 2016 ஆம் ஆண்டு நான் முதன்முதலில் ஜெர்மனி வந்தபோது பல சரக்கு அங்காடிகளில் சூரியகாந்தி பூ எண்ணெய்  மற்றும் ரேப்சீடு எண்ணெயின் விலைகளை பார்த்து ஆச்சரிய பட்டேன். ஒரு லிட்டர் 0.75 சென்ட்ஸ். இந்த ஐந்து ஆண்டுகளில் விலைவாசி உயர்வின் காரணமாக அவை 1 யூரோ வை தாண்டி விட்டன. ஆனால், கடந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னுடைய அகக்கண்களை பல்வேறு விதமாக திறந்துவிட்டது.  “20...

போய் சேர்க்க முடியாத கடிதங்கள்!

 1999 ஆம் ஆண்டு முதல் 2016 வரை பல தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் காதலின் தாக்கமும் கவிதைகள் மீது நாட்டமும் வர காரணமாக இருந்து, கண் பேசும் வார்த்தைகள் பலவற்ற ரசிக்க வைத்த கவிஞர் அவர்களுக்கு, என் பருவ வயது மனதில், முதன் முதலில் தோன்றிய பட்டாம்பூச்சிகளுக்கு உங்கள் வரிகள் மூலம் விடை கண்டு கொண்ட கடைக்கோடி ரசிகை எழுதுவது. 2011 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் வார தொடராக வந்து, பின் புத்தகமாக வெளியிடப்பட்ட உங்களின் “அணிலாடும்  முன்றில் ” எனும் அற்புதமான படைப்பை நான்கு நாட்கள் முன்பு படித்து முடித்தேன். நீங்கள் இந்த புத்தகத்தை எழுதும் போது எதை நினைத்து எழுதுனீர்களோ, உங்களுடைய மறைவுக்கு பின்னர் படிக்கும் போது நீங்கள் எதிர்பார்த்த உணர்வுகளை மிஞ்சி கொண்டு வந்து நிற்கிறது உங்களுக்காக சில கண்ணீர் துளிகள். என்னளவில் பல கண்ணீர் துளிகள். நான்கு நாட்களாக உங்கள் பாடல்கள், நீங்கள் அளித்த பேட்டிகள், உங்களை பற்றி பேசிய பேட்டிகள் ஆகிவற்றை தேடித் தேடி பார்த்துக் கொண்டு நீங்கள் இல்லாமல் போய்  ஐந்து வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது என்ற உண்மையை ஏற்க முடியாத மனநிலையில் சுற்றிக் கொண்டிருக்கிறேன். நான்கு நாட...